மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 
ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 

Social Vision
Last updated: 2024/02/27 at 12:30 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்
நுகர்வோர் சட்டம் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் கி.சாந்தி பரிசு வழங்கினார்.

 

 இவ்விழாவிற்கு  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையேற்று பேசும் போது  தெரிவித்ததாவது:
 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் -2019 நுகர்வோர் நலன்களை நன்கு காத்திட வகைசெய்வதற்கும்,  இந்நோக்கத்திற்காக நுகர்வோர் மன்றங்களை அமைப்பதற்கும், நுகர்வோர்  பூசல்கள் மற்றும் அதன் தொடர்பான விசயங்களை தீர்வு செய்வதற்குமான ஓர் சட்டம் ஆகும்.
நுகர்வோர்களை பாதுகாக்க மற்றும் நுகர்வோர்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்  உதவியாக இருக்கின்றது.  பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு உதவிட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.  மத்திய நுகர்வோர்  பாதுகாப்பு குழு, மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு ஆகிய மூன்று வகையான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019 குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் முழுமையாக பெற வேண்டும். பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும்,  முழுமையாக அதனை அறிந்து  அனைவரும் பின்பற்ற வேண்டும்.  நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்திட  அனைவரும் முன்வர வேண்டும். என தெரிவித்தார்.
 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019 நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட  பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில்  வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த நுகர்வோர் அமைப்புகளுக்கு,   கேடயம் பரிசுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய  அலுவலர்களுக்கும்  கேடயங்கள்  வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலரால் உணவுப் பாதுகாப்பு  தரமுள்ள பொருட்களை வாங்குதல் குறித்தும், உணவின் தரம் கண்டறிவது குறித்து செயல்விளக்கம் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்  செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜ.நாசிர் இக்பால், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆ.பானுசுஜாதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் தேன்மொழி,  அலுவலர்கள், நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: Consumer rights, நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, மத்திய நுகர்வோர்  பாதுகாப்பு குழு, மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழு
Social Vision February 27, 2024 February 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 

November 25, 2024
மாவட்டங்கள்

தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.

February 22, 2024
அரசு நல திட்டம்
தமிழ்நாடு

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.

February 7, 2024
அரசியல்

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 20, 2025
தமிழ்நாடு

தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.

March 4, 2024
உலகம்

உக்ரைன் சுதந்திர தினம்: 1991-ல் உதித்த புதிய அத்தியாயம்

August 24, 2026

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரியில் போதை ஒழிப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

September 9, 2026
ஆரோக்கியம்உலகம்

தேங்காயை அதிக பயன்படுத்தும் நாடு இந்தியா

September 2, 2026
ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?