கோபிநாதம்பட்டிகூட்ரோடில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய தேமுதிகவினர்
தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைதலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் குமார் கலந்து கொண்டு் மறைந்த விஜயகாந்த உறுவ படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு புங்கன் புளியன் வேம்பு உள்ளிட்ட பலவகையான மரக்கன்றுகள் வழங்கினர். இறுதியில் தேமுதிகவில் புதியதாக இணைந்தோருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் தங்கவேல், மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட்மாரிமுத்து, பேரவை துணை தலைவர் விஜய்வெங்கடேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் த.சேட்ராவ், நகர செயலாளர் கார்த்திக், நகர அவை தலைவர் கார்த்திக் வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஆசை, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வெங்கடேசன் பாபிரெட்டிபட்டி ஒன்றிய செயலாளர் ரமேஷ், தருமபுரி விக்னேஷ்சரவணன், மொரப்பூர் ராஜேந்திரன், தருமபுரி தேவதேவன், தங்கதுரை, பொன்மொழி, ரங்கநாதபூபதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியில் ஒன்றிய பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.

