மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
அரசியல்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

Social Vision
Last updated: 2024/02/25 at 8:45 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு மிகப் பிரமாண்டமாக,காட்சியளிக்கிறது. கலைஞரின் குழந்தை பருவம் முதல் அவரது அரசியல் பயணம் வரை இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்  கலைஞர் கருணாநிதி. இவர் 95ம் வயதில் 2018 ஆகஸ்டு 7ம் தேதி மறைந்தார். இவருக்கு  அண்ணா நினைவிடம் அருகில் நினைவிடம் அமைந்துள்ளது.
அண்ணா, கலைஞரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணா சிலை, வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் உள்ளன.இருபுறங்களிலும் பசுமையான புல்வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது. அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. அண்ணா சதுக்கத்தை கடந்து சென்றால் கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை காணப்படுகிறது. எதிரே கலைஞர் சதுக்கம். ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ எனும் தொடர் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.
 சதுக்கத்தின் பின்புறம் கலைஞர் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிர்கிறது. சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிர்கின்றன. கீழே நிலவறைப் பகுதியில், ‘கலைஞர் உலகம்’ எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் பகுதியில் இடப்புறம் சென்றால் திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது.
 அருகில், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறை உள்ளது. அதில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சியளிக்கிறது. அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம். இதன் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கு கிடைக்கும்.
தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கி முதல்வர் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். பொதுப் பணித் துறையால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து,
 புதுப்பிக்கப்பட்ட அண்ணா , கலைஞரின் புதிய நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நாளை (திங்கள்) மாலை 7 மணி அளவில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
TAGGED: Anna ninaividam, Cm mk Stalin, Kalaignar Karunanidhi ninaividam, Marina beach, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மஉத்தமஇழறஇஞர் கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணா கலைஞர் நினைவிடம்
Social Vision February 25, 2024 February 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உடனே விண்ணப்பிக்கலாம்.

May 20, 2024
அரசியல்

சிறு திருத்தத்துடன் கட்சி பெயரை அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்  

February 17, 2024
தமிழ்நாடு

1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

April 23, 2026
உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை.
ஆரோக்கியம்

தருமபுரி : பாலக்கோடு பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.

February 5, 2024
மாவட்டங்கள்

வெங்கட்டம்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா:500 தென்னை மரக்கன்றுகள் வழங்கல்.

March 4, 2024

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?