மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி
தொழில்

தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி

Social Vision
Last updated: 2024/02/23 at 9:04 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சிறு, குறு  மற்றும் நடுத்தரத் (MSME) தொழில்களுக்கான மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில்  நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.
மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து, வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழில்கள் துவங்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மேலும், இம்முகாமில் பல்வேறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் 39 பயனாளிகளுக்கு ரூ.9.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒப்பளிப்பு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 1018 பயனாளிகள் ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.
இம்முகாமில் சுயதொழில் கடன் திட்டங்கள் மாநில அரசின் மானியங்கள் (25% மூலதன மானியம், மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பா.கார்த்திகைவாசன், பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் கண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் எட்வர்ட் ஸ்டீபன், தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கு.கண்ணன், MSME சங்கத் தலைவர்கள்  இ.ரா.வெங்கடேஸ் பாபு (தருமபுரி), ஜெ.சரவணன் (கடகத்துார்), நெல் அரவை முகவர்கள் சங்க தலைவர் ப.பாஸ்கரன், வணிகர் சங்க தலைவர் சி.ரவிச்சந்திரன், தொழில் ஊக்குவிப்பு அலுவலர் பெ.வெங்கடேஸ்வரி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Social Vision February 23, 2024 February 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்

July 10, 2024
மாவட்டங்கள்

 அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 

June 8, 2024
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.

July 30, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

March 15, 2024
விளையாட்டு

ஜன -5 ல் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி மாணவர்கள் வீராங்கனைகள் பங்கேற்கலாம் 

December 27, 2024
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 17200 விபத்தில் இறப்பு

February 12, 2024

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?