பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தருமபுரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16- தேதி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சௌகத் (20) என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மாணவி குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து இண்டூர் போலீசார் புகார் அளித்தனர். பின்னர் இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு கடத்தல் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து சௌகத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் சௌகத் குற்றம் செய்தது உறுதியானது. சௌகத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பு அளித்தார்.

