மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்‌கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்‌கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு 
மாவட்டங்கள்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்‌கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு 

Social Vision
Last updated: 2024/02/22 at 5:07 PM
Social Vision
Share
2 Min Read
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ஒகேனக்கல் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா?என பெண்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்
SHARE
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்‌கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு 
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் 2வது நாளாக நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
இத்திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம்,  பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சின்ன ஏரியில் அம்ரூத் 2.0 (2022-2023) திட்டத்தின் கீழ், ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையத்தை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளின் இயக்க நேரம் குறித்து கேட்டறிந்தார்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ஒகேனக்கல் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா?என பெண்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்
இதனைதொடர்ந்து, பாப்பாரப்பட்டிம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட குடிநீரில் உள்ள குளோரினேசன் அளவு குறித்து  ஆய்வு மேற்கொண்டு,  பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டுமெனவும், சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது உறுதிசெய்திட வேண்டுமெனவும் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆய்வு
மேலும், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உணவுகள் தயார் செய்யப்பட்டுவருவதையும், உணவின் சுவை குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்கள். தொடர்ச்சியாக, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுதேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பாரப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி
பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (2022-2023)-ன் கீழ், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணிகளையும், அ.பாப்பாரப்பட்டியில் இயங்கிவரும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் கொள்முதல் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பென்னாகரம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் காலை 9.00 மணி முதல் இன்றைய தினம் காலை 9.00 மணி வரை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் தகுதியான பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டுமெனவும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தரமானதாக இருக்க வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் கோமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
TAGGED: "உங்கள் ஊரில் உங்களைத் தேடி", அரசுப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆய்வு, ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு, பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
Social Vision February 22, 2024 February 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லதிட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

July 2, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர அர்பணிப்புடன் செயல்படவேண்டும்.  ஆசியரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

February 21, 2024
தமிழ்நாடு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3151 போதாது: டன்னுக்கு குறைந்தது ரூ.1000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்!பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

March 6, 2025
தருமபுரி-குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு

March 6, 2024
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

October 2, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?