மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
அரசு நல திட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

Social Vision
Last updated: 2024/02/21 at 5:29 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் , மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கும் மற்றொரு திட்டமாகும்.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் இன்று பிப்- 21காலை 09.00 மணி முதல் நாளை பிப்-22.காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.
கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு
 பென்னாகரம் வட்டம், நாகதாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, திடீரென ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 குறிப்பாக பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
நாகதாசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு 
இதனைதொடர்ந்து, நாகதாசம்பட்டி அங்கன்வாடி மையம் ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்தும்,ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கெட்டூர் பகுதிநேர நியாய விலை கடை ஆய்வு 
ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் கெட்டூர் பொது விநியோக திட்ட பகுதிநேர நியாய விலை கடை, ஆய்வு செய்த பின் கெட்டூரில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் காலிஃப்ளவர் பயிரிடப்பட்டுள்ளதை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ஆய்வு 
ரங்காபுரம் பகுதியில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமாக்கல்  திட்டத்தின் கீழ் ரூ. 7.00 இலட்சம் மானியம், ரூ. 3.50 இலட்சம் விவசாயி பங்களிப்பு என ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள டிராக்டர் இயந்திரத்தினை ஆட்சியர் பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார்கள். மேலும், இப்பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருவதை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர் 
இதனைதொடர்ந்து, தித்தியோப்பனஅள்ளியில் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர், மாணவர்களிடம்  கலந்துரையாடி, குறைகளைக் கேட்டறிந்தார்,
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தகௌரவ் குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தகாயத்ரி, மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கணேசன், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், விமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
TAGGED: PHC ஆய்வு, VAO Office, உங்கள் ஊரில் உங்களை தேடி, சாந்தி IAS, பகுதிநேர நியாயவிலை கடை, மாணவிகளிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, வேளாண்மை பொறியியல் துறையின் திட்டங்கள்
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
ஆன்மிகம்

பாலக்கோடு அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

August 23, 2024
இந்தியா

தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி 

September 28, 2025
தமிழ்நாடு

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

March 1, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

July 6, 2024
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,வெற்றிதுரைசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

February 13, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?