மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூர் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்டு அரசு போருந்து  நடத்துனர்.நடத்துனர் ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > அரூர் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்டு அரசு போருந்து  நடத்துனர்.நடத்துனர் ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்.
தமிழ்நாடு

அரூர் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்டு அரசு போருந்து  நடத்துனர்.நடத்துனர் ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்.

Social Vision
Last updated: 2024/02/21 at 12:33 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

அரூர் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்டு அரசு போருந்து  நடத்துனர்.நடத்துனர் ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமம், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் பாஞ்சாலை, (59) என்பவர் வாழ்வாதாரத்திற்காக நவலை பஸ்நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். மாலை நேரத்தில் மாட்டிறைச்சி பொரித்து விற்பனை செய்தும் வருகிறார்.
பாஞ்சாலை, செவ்வாய்க்கிழமை அரூரில் மாட்டிறைச்சியை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து தனது கிராமமான நவலை வருவதற்கு அரூரில் இருந்து ஓசூர் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில்  (TN29 N3165 ) ஏறியுள்ளார். அவர் மூடியிடப்பட்ட தூக்குவாளி ஒன்றை கையில் வைத்திருந்திருக்கிறார். பேருந்து மோப்பிரிப்பட்டி வனப்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது  பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துனர் ரகு, என்பவர் பாஞ்சாலையின் கையிலுள்ள தூக்குவாளியைப் பார்த்துவிட்டு நீ அந்த நவலைக்காரி தானே, தூக்குவாளியில் என்ன மாட்டுக்கறியா என்று கேட்டதாக சொல்லப்படுகிறது.
இவ்வளவு பயணிகள் இருக்க தன்னிடம் நடத்துனர் இவ்வாறு ஏன் கேட்கிறார் என்று அதிர்ச்சியடைந்த  பாஞ்சாலை பதில் சொல்வதற்குள் நடத்துனர் விசிலடித்து பேருந்தை நிறுத்தியதாகவும்,
நீ மாட்டுக்கறிதான் வைத்திருப்பாய் அதையெல்லாம் வைத்துக்கொண்டு பேருந்தில் செல்ல அனுமதிக்க முடியாது, நீ பேருந்தை விட்டு இறங்கு என்று நடத்துனர் சொன்னதாகவும், அப்படி இறக்கி விடுவதாக இருந்தால் ஏதாவொரு பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று பாஞ்சாலை கெஞ்சிக்கேட்டதாகவும் ஆனால், அதற்கு உடன்படாத நடத்துனர் அந்த இடத்திலேயே இறக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அவமானப்படுத்தி இறக்கிவிட்டதால் ஏற்பட்ட மனவுளைச்சலுடன் அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் உச்சிவெயிலில் நடந்து வந்து அடுத்த பேருந்து நிறுத்தத்தில்  பேருந்து பிடித்து பாஞ்சாலை ஊர் வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மகனிடம் மற்றும் உறவினர்களிடமும் பாஞ்சாலி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் நேற்று இரவு பேருந்து  ஓசூரிலிருந்து திரும்பி வருகையில் நவலையில் நின்றபோது, நடத்துனர் ரகுவிடம் வயதான பெண்ணை இப்படி இறக்கிவிட்டது நியாயமா என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நான் ரூல்ஸ்படி இறக்கிவிட்டேன். உங்களால முடிஞ்சத பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆணவமாக சொல்லிவிட்டு கிளம்பியதாக சொல்லப்படுகிறது.
இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர் சசிகுமார், நடத்துனர் ரகு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தருமபுரி மண்டல பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED: Driver, Government bus, Harur untechbilt, Tnstc, Tnstc Salem division
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.
மாவட்டங்கள்

தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.

February 16, 2024
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

March 11, 2025
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 43,993 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

November 10, 2025
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா

14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்

June 20, 2024
தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?