கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதுர்பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையெட்டி, கட்டாய
வசூலிலில்ஈடுபட்டஇக்கோயில்,நற்பணி மன்றத்தினரை கண்டித்து, இக்கோயிலுக்குபட்ட 12 கிராம மக்கள் பாலக்கோடு தக்காளி மார்கெட் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதுர்மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பெளர்னமியையொட்டி ஒருவாரம் நடைப் பெறுவது வழக்கம்.
காலம், காலமாக கோயிலுக்கு சொந்தமான, மேல் தெரு. பனங்காடு, சித்திரப்பட்டி, வாழைத்தோட்டம், குப்பன் கொட்டாய், ரெட்டியூர், காவாப்பட்டி, செங்கோடப்பட்டி, தொட்டம்பட்டி, உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் மற்றும் கோயில் விழா குழுவினர் திருவிழாவை நடத்தி வந்தனர்.
ஆனால் இடையில் ஸ்ரீபுதுர் பொன் மாரியம்மன் இளைஞர் நற்பணிமன்றம் என்ற பெயரில் ஒரு சிலர் கோயில் திருவிழாவிற்க்கு நன்கொடை என்ற பெயரில் தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள், நடைபாதை வியபாரிகள் என அனைவரிடமும் மிரட்டி பணம் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோயில் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் கூறியும், கோயில் வளாகத்தில் காலம் காலமாக நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க கோரியும், கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஸ்ரீபுதுர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணிமன்றத்தை தடைசெய்ய கோரியும், 12 கிராம மக்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் தருமபுரி – ஓசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

