புனே இரானுவநிலையத்தில் வைர விழா: முன்னாள் படைவீரர்கள் இவ்விழாவில் கோரிக்கை மனு வழங்கலாம்.
Mahar Regiment படைப்பிரிவு துவங்கி 60 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு வைர விழா வருகின்ற 28.02.2024 முதல் 01.03.2024 வரை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இராணுவ நிலையத்தில் நடைபெறவுள்ளது.
எனவே இப்படைப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் மனுவாக அளித்து பயன் அடையுமாறும், இது குறித்து விரிவான விவரம் பெறுவதற்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.

