மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 
கல்வி & வேலைவாய்ப்பு

கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 

Social Vision
Last updated: 2024/02/17 at 3:43 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 
தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் ”பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய தருமபுரி மண்டல மாநாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பேசியதாவது:-
பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளையும் என் பிள்ளைகளாகவே நான் கருதுகிறேன். படிப்பில் பின் தங்கிய அனைவரும் என் செல்ல பிள்ளைகளே அதனால் தான் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான இந்த தருமபுரி மாவட்டத்தில் இந்த பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மண்டல மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கும் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் அப்பள்ளிக்கு வழங்கிய பல்வேறு பெருட்களை சீர்வரிசை பொருட்களாக இங்கு சுமார் 201 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர். இது மிகுந்த பாராட்ட கூடிய ஒன்றாகும். போராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 3,000 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3,000 வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இருந்து தைய்வான் அரசின் கல்வி உதவிதொகையுடன் அந்நாட்டின் பல்கலைக் கழகத்தில் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மாணவர்களில் நமது தமிழ்நாட்டை சேர்ந்த 2 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது பெருமைக்கூறிய ஒன்றாகும். கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!  இங்கு வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அரசின் திட்டங்களுக்கு ஆதரவளித்து அறிவு சார்ந்த சமுதாயத்தினை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்கள் மற்றும் நூலகத்தினை சென்னையில் இருந்து திறந்து வைத்ததற்காக தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ”பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” தருமபுரி மண்டல மாநாட்டில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகளுக்கு தங்களது நிலம், அதிக அளவிலான நிதி , பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 100 நன்கொடையாளர்களுக்கு கேடையங்களை வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Social Vision February 17, 2024 February 17, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மருத்துவமனை கட்டிடம்,மினிடைட்டில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

November 5, 2025
குற்றம்

புள்ளிமானை வேட்டையாடி விற்பனை செய்தவர் கைது

May 25, 2024
மாவட்டங்கள்

பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

January 6, 2025
மாவட்டங்கள்

பாலக்கோடு அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பிப் 21-ல்.உள்ளூர் விடுமுறை 

February 12, 2024
தமிழ்நாடு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 

May 20, 2024
தமிழ்நாடு

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

March 1, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?