மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

Social Vision
Last updated: 2024/02/16 at 5:03 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முறையே 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, 500 மதிப்பெண்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தலா 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில்  500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு , கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.
தமிழ் அல்லாமல் பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக  படிக்காமலேயே உயர்கல்விக்கு சென்று விடுகிறார்கள் என புகார் தெரிவிக்கப்பட்டது.
 இதனால் தமிழ் மொழி தொடர்பாக எந்தவித பொது அறிவும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும், தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்ற அடிப்படையில், அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழை தாய் மொழியாக இல்லாத மாணவர்கள், தங்கள் மொழி பாடத்தை படிக்க வேண்டும் என்று விரும்பியதால், பிறமொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழி பாடத்தை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை தொடர்ந்து  நான்காவது விருப்ப படமாக படிக்கலாம் என்றும், ஆனால் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து தங்களது மொழிக்கான தேர்வில் மதிப்பெண்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது, அவமதிப்பதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில், சிறுபான்மை சமுதாய அமைப்புகள்  வழக்கு தொடர்ந்தன.  அந்த வழக்கில், விருப்ப பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கி, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறார்.  அதில், நான்காவது விருப்ப படமாக இடம் பெறும் தமிழ் அல்லாத பிறமொழி பாடங்களுக்கு,  35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் (2024-2025)  இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை விருப்பப்படமாக தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.  மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள்  500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

February 27, 2024
தொல்லியல்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

February 12, 2026
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 

September 19, 2025
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

February 27, 2024
ugc
கல்வி & வேலைவாய்ப்பு

யு.ஜி.சி அறிவுறுத்தல் : மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

March 4, 2024
சுற்றுலா

அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு

June 20, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?