மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
அரசியல்

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

Social Vision
Last updated: 2024/02/16 at 5:32 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக  நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் பிப்-16.ல்,நெல்லையில் நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்பொதுக்கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:
ஒன்றிய அரசின் திட்டங்கள் புரியாத மொழியில். 
 “ஒன்றிய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.
பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார், உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என்று கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கின்றனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் அவர்கள், தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை.
தென்மாநிலங்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என ஒன்றிய அரசு நினைக்கிறது.
தமிழ்நாடு முதன்மை மாநிலம்
ஒன்றிய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம்  உருவாக்கிக் காட்டியிருக்கிறோம். உத்தர பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியை அள்ளிக் கொடுக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தும் ஏன் அது இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.” என்று பேசினார்.
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC-GROUP-I தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற அழைப்பு 

May 28, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

July 4, 2025
உலகம்

சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்

March 18, 2024
எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன்
மாவட்டங்கள்

BP4 ஐ ரத்து செய்ய கோரி எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் கண்டன ஆர்ப்பாட்டம்.

March 8, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

June 29, 2024
மாவட்டங்கள்

அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

January 11, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?