மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!
அரசியல்

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!

Social Vision
Last updated: 2024/02/16 at 9:41 AM
Social Vision
Share
2 Min Read
மேகதாது ராமதாஸ்
SHARE

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு. ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும், மேகதாது அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் நிநிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

megadathu

உச்சநீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் வழங்கியது. அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாக கர்நாடகம் அறிவித்திருக்கிறது. இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

megadathu-dam

சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924&ஆம் ஆண்டில் கையெழுத்தான காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது. காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை. மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழி மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான். அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கருநாடகத்தை எச்சரிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: megadathu, megadathu-dam, காவிரி, பாட்டாளி மக்கள் கட்சி, மரு. ராமதாஸ், மேகதாது, மேகதாது அணை, ராமதாஸ்
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு

June 20, 2024
தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

January 5, 2025
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
மாவட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ரசீது இல்லாத ரூபாய் 96500 கைப்பற்றப்பட்டது.

March 22, 2024
மாவட்டங்கள்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு

September 24, 2025
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?