சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் : ஜெயம் ரவி

கோயம்புத்தூர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ,கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி, இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன் மேலும் எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும் என தெரிவித்தார்.

அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, 18 வயது நினைவுகளை நினைவு படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும் அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது என்றார். அதனை தொடர்ந்து மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க மேடையில் நடனமாடினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள சைரன் திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.
அது குறித்து பேசிய ஜெயம்ரவி, சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் எனவும் 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்க கூடிய கதை இது எனவும் அனைவரும் இந்த படத்தை விரும்புவர் என தெரிவித்தார். மேலும் சைரன் படத்தின் 10 நொடி காட்சிகள் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

