மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,
அரசியல்

விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,

Social Vision
Last updated: 2024/02/13 at 7:13 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்!
தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துளளதாவது:
விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.
கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டமானது தொடங்கியது. பாசிச மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த்தியாகத்தால் ஓர் ஆண்டிற்கும் மேலாக நீடித்து வந்த போராட்டம் மோடி அரசை அடிப்பணிய வைத்தது. பின்னர் மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.
தொடர்ந்து, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது, மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி அரசு ஏற்றிருந்தது.
ஆனால், அக்கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்த விவசாய சங்கங்கள், தற்போது மீண்டும் டெல்லி முற்றுகை போராட்டத்தை அறிவித்ததோடு, 13.02.2024 அன்று டெல்லியை நோக்கி கிளம்பியது.
இந்த போராட்டத்தில், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், டெல்லியை நோக்கியை புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பாசிச பாஜக அரசு. அதாவது, டெல்லி -அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் டெல்லியை நோக்கி வந்த விவசாயிகள் மீது அரியானா காவல்துறை, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.
அதேசமயத்தில், விவசாயிகள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதற்காக சாதகமாக அரியானா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த போன்ற கிராமங்களில், கடந்த 2 நாட்களாக, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை துண்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சலோ போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற கர்நாடக விவசாயிகளை, போபால் இரயில் நிலையத்தில் வழிமறித்து தாக்கியுள்ளது அந்நகர காவல்துறை. மேலும், விவசாயிகளின் தொலைபேசிகளை பறித்து அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுடன் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது.
சண்டிகரில் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது யூனியன் பிரதேச நிர்வாகம். டெல்லியை சுற்றியுள்ள டெல்லி- உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்குள் நுழையும் போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக, வாகனங்கள் டெல்லிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்ப்பதற்காக, முயன்று வரும் மோடி அரசு,  விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமனது, அமைதியான வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதன்படி, தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடும் விவசாயிகளை கைது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதோடு, விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, இணையத்தை முடக்குவதும், 144 தடை விதிப்பதும், தடியடி நடத்துவதும் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற ஐயம் எழுகிறது.
எனவே, பாசிச பாஜகவிற்கு முடிவு கட்ட நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும், தமிழ்நாடு அரசும், மாண்புமிகு முதல்வர் அவர்களும், ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
பாசிச பாஜக சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட, விவசாய சங்களும், மாணவர் அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும், ஒன்றைப் புள்ளியில் அணி திரள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.
Social Vision February 13, 2024 February 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

October 22, 2024
உலகம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

May 30, 2024
சாதனையாளர்கள்

23 வயதில் நீதிபதியான ஸ்ரீபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 13, 2024
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை திருமணம்

November 24, 2024
நாவல்
புத்தகம் பேசினால்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல்

April 26, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?