பாலக்கோடு சர்க்கரை ஆலை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர். பெ.செல்வராணி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநர் முனைவர்.கி.முருகன் வரவேற்றார். மாவட்ட துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) மருத்துவர் ஆர்.புவனேஸ்வரி, ஸ்லைடு காட்சி மூலம் மாணவ-மாணவியர்களுக்கு தொழு நோய் விழுப்புணர்வு குறித்து பேசினார்.
தொழுநோய் என்பது அதுவும் மற்ற நோய்களைப்போல் ஒரு கிருமியினால் ஏற்படுகிறது. மைக்ககோ பேக்டீரியம் லெப்ரே என்ற கிருமியினால்(Droplet infection) காற்றின் மூலம் பரவுகிறது என்றும், சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சி குறைந்த அல்லது உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவித்தார் மேலும் அறிகுறிகளாக கை கால்களில் மதமதப்பு கால் பாதத்தில் ஆறாத புண் உடல் முழுவதும்,எண்ணெய் பூசப்பட்டது போல் மினுமினுப்பாக இருப்பது
காது மடல்கள் தடித்து இருப்பது உடல் முழுவதும் முடிச்சுகள் இருப்பது போன்றவைகள் அறிகுறிகளாக இருக்கலாம்.
மற்ற தேம்பல்களிலிருந்து எவ்வாறு தொழுநோய் தேமல் மாறுபட்டது என்று விரிவாக பேசினார்.

ஆரம்பநிலையில்நோயை கண்டறிவது உடல் ஊனத்தை தவிர்க்கும் என்றும் 2027-க்குள் தொழுநோயை ஒழிப்பது குறித்தும் தொழுநோய் என்பது சாபத்தினாலோ பாவத்தினாலோ தகாத உறவினாலோ வருவதல்ல, தொழுநோயாளிகளை வீட்டிலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒதுக்கி வைக் கூடாது என்றுஅறிவுரை வழங்கினார்.
தொழுநோய்க்கு ஆளான சிகிச்சை முடித்து பூரண குணமடைந்த மாற்றுதிறனாளிகளுக்கு மாதம் ரூபாய் இரண்டாயிரம்
அரசு உதவி வழங்கப்படுவது குறித்தும் பேசினார். இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.எம்.சிவகுரு மருத்துவமல்லாமேற்பார்வையாளர் பி.நாகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.இளவரசு உரையாற்றினர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பாலக்கோடு வட்டாரத்தின் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஏ.சேகர் செய்திருந்தார்.சுகாதார ஆய்வாளர் கே.சோமு நன்றி கூறினார்.

