மாம்பட்டி அரசுப் பள்ளியில் சமத்துவ ஆண்டுவிழா

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் மாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 42வது ஆண்டு சமத்துவ ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் சி.சேகர் தலைமை வகித்தார்.கணித ஆசிரியை கே.சஙகீதா வரவேற்றார்.
கணித ஆசிரியர் ஏ. ஏகநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் கு. சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டு தமிழ் இலக்கியங்களில் உள்ள கல்வியின் சிறப்புகள் குறித்தும், கல்வியினால் உயர்ந்த இடத்தைப் பெற்ற பல்வேறு ஆளுமைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
இவ்விழாவில் ஆண்டு அறிக்கையை கணித ஆசிரியர் திரு ஏ. ஏகநாதன் வாசித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் த ம. சொக்கலிங்கம் பரிசளித்து வாழ்த்தினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே. ஜெகதீசன், எஸ்எம்எஸ் பொருப்பாளர்கள் ஐ.ரமீனா, ராமமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

அதைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பரதநாட்டியம், கரகாட்டம், குழு நடனம், ஆகிய கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர்.
கணித ஆசிரியர் எ.கொ. அம்பேத்கார் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் தமிழாசிரியை சு.மாரீஸ்வரி நன்றி கூறினார்.

