ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய லால் சலாம் படம் இன்று வெளியாகி உள்ளது. ஆனால், லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளே பெரிய வரவேற்பை பெறாதாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கேங்ஸ்டராக ரஜினிகாந்த் எக்ஸ்டன்டட் கேமியோ ரோலில் விக்ராந்துக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். முதல் 15 நிமிடங்கள் வரும் அவர், அதன் பின்னர் கடைசி கிளைமேக்ஸில் தான் வருகிறார் என்றும் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி இருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஆனால், முதல் நாளில் மொய்தீன் பாயை நம்பி லால் சலாம் படத்தை வாங்கிய பல தியேட்டர்களில் முதல் ஷோவே ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்தில் காட்டும் படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருவது ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

படத்தின் கருத்து நல்லா இருந்தாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேக்கிங் ஸ்டைல் படத்தை டல் அடிக்க வைத்து இருப்பதாகவும் இந்த படம் இடைவேளை வரை சுமாராக செல்வதாக ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனங்களை போட்டுத் தாக்க ஆரம்பித்து விட்டனர். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள கிரிக்கெட் மத அரசியல் படமாகத்தான் இதனை ரசிகர்கள் பார்த்துவிட்டு தியேட்டர் பக்கம் படையெடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

