மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது ? – ராமதாஸ் கேள்வி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது ? – ராமதாஸ் கேள்வி
தமிழ்நாடு

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது ? – ராமதாஸ் கேள்வி

Social Vision
Last updated: 2024/02/08 at 9:19 AM
Social Vision
Share
2 Min Read
ராமதாஸ் அறிக்கை
SHARE

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது செய்ததை கண்டித்தும், முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின்  அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது என பாமக நிறுவனர் மருத்துவர் ரமாதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி தொழிலாளர்களாக பணி செய்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது.

இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மேலும் 19 மீனவர்களை சிங்களப்படை கைது செய்திருப்பதை இயல்பான ஒன்றாக கருத முடியாது. தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 
கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 
நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பலநூறு முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதை உணர்ந்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது. அதனால் எந்த பயனும் ஏற்படாது.

தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் – கைது நடவடிக்கைகள் குறித்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காதது ஏன்? என்று வினா எழுப்பியிருந்தது. உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TAGGED: இலங்கை ராணுவம், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், மீனவர்கள், ராமதாஸ், ராமேஸ்வரம் மீனவர் கைது
Social Vision February 8, 2024 February 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வேலையில்லா திண்டாட்டம்
இந்தியா

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 வேலையில்லாத நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் தகவல். 

February 8, 2024
இந்தியா

இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 

June 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 

July 13, 2024
தமிழ்நாடு

ஜீலை 11 அன்று தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு 

July 9, 2024
அரசியல்

விசிக தலைவர் தொல் .திருமாவளவன் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து 

June 11, 2024
வேலைவாய்ப்பு

விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 1, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?