மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி சிறப்பாக செயல்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு கேடயம் பாரட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி சிறப்பாக செயல்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு கேடயம் பாரட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.
மாவட்டங்கள்

தருமபுரி சிறப்பாக செயல்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு கேடயம் பாரட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/02/06 at 1:50 PM
Social Vision
Share
2 Min Read
கல்வி உரிமை தொகை
கல்வி உரிமை தொகை
SHARE
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தலைமையில் நடைபெற்றது.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 408 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையாக மொத்தம் ரூ.1.00 இலட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து நிதியுதவியாக அளிக்க கோரி, கோரிக்கை மனு அளித்ததை தொடர்ந்து,
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாற்றுத்திறனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய தேவையான பயனாளியின் பங்களிப்புத்தொகை ரூ.1.00 இலட்சத்தினை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ஒதுக்கி, அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையினை ஆட்சியர்  வழங்கினார்
மேலும்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதிகளின் காப்பாளர்களுக்கு பரிசுகள், நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சையது ஹமீத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை பொறியாளர் சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
TAGGED: நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைய
Social Vision February 6, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

February 12, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : ஆர்வமாக செல்பி எடுத்த மாணவர்கள் 

February 28, 2024
தமிழ்நாடு

சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்பி

July 4, 2025
அரசு நல திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை

May 23, 2024
தமிழ்நாடு

“பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

January 30, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?