மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கொடூர மரண தண்டனை எந்த நாட்டில்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கொடூர மரண தண்டனை எந்த நாட்டில்
குற்றம்

கொடூர மரண தண்டனை எந்த நாட்டில்

Editor
Last updated: 2024/01/09 at 1:59 PM
Editor
Share
6 Min Read
SHARE

மரணதண்டனை என்பது, ஆதிக்கம் செலுத்துகிறவார்களால் அதிகார தன்மையை தனது நடவடிக்கைகளின் மூலம் தவறு இளைத்த மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். கடுமையான குற்றம் என்பது சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் வேறுபாடாக உள்ளது.
தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், கம்பத்தில் கட்டிவைத்துச் அடித்தல், சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

உலகில் பல்வேறு நாடுகள் மரணதண்டனையை சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளன. சில நாடுகளில் தற்போது மரணதண்டனைக்கு மாற்று தண்டனைகள் குறித்தான ஆய்வுகள் நடக்கின்றன. உலகின் 90% நாடுகள் சர்வதேச மன்னிப்பு சபைப்படி, இயங்குகின்றன. 100 (51%) நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டுமென விரும்புகின்றன. 7 (4%) நாடுகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் (அதாவது போர் நேரம் போன்ற) குற்றங்களை தடுக்க மரணதண்டனையை விரும்புகின்றன. 48 (25%) நாடுகள் சாதாரண குற்றங்களுக்காக மரணதண்டனை பயன்பாட்டை அனுமதிக்கின்றன. 40 (20%) நாடுகளின் சட்ட நடைமுறையில் இரண்டு மரண தண்டனைகளைப் பராமரிக்கின்றன.

இதையும் படிங்க

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

இந்தியாவில் மரண தண்டனை

பெரும்பாலும் கொலைகள் மற்றும் பாலியல் வன்முறையுடன் இணைந்த கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2018ல் இவற்றின் எண்ணிக்கை முறையே 45 மற்றும் 58 என இருந்தது. இந்தியாவில் இந்தத் தண்டனைகள் இந்திய குற்றவியல் சட்ட விதிகளின் (1860) கீழ் நிறைவேற்றப் படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேறு 24 சட்டங்களின் கீழ் மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அதிகபட்ச எண்ணிக்கையில் மரண தண்டனைகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு, அந்த மாநிலத்தில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஹரியானா (90), மத்தியப் பிரதேச (73) மாநிலங்கள் உள்ளன.
2018 ஆம் ஆண்டில் புதிதாக 162 பேருக்கு மரண தண்டனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொகுப்பு தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டைவிட அது 50 சதவீதம் அதிகம். சுமார் 20 ஆண்டுகளில் அதுதான் அதிகபட்ச எண்ணிக்கை.
பாலியல் வன்முறையுடன் இணைந்த கொலைக் குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மூலம் 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 35 சதவீதம் அதிகம். சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதால் நிறைய பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் 250 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 229 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் உலக அளவில், 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 2017ல் இந்த எண்ணிக்கை 2,591 ஆக இருந்த நிலையில், 2018ல் அது 2,531 ஆகக் குறைந்திருந்தது.

உலகில் அதிகம் மரண தண்டனை நிறைவேற்றிய நாடு
கடந்த ஆண்டில் 690 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் குறைவு.
2018ல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றங்களில் 80 சதவீதம், நான்கு நாடுகளில் நடந்துள்ளது:
இரான்,சௌதி அரேபியா,வியட்நாம்,இராக்,
அரிதாக கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் மரணதண்டனை

1980 ஆம் ஆண்டில் மக்காவில் உள்ள கிராண்ட் பள்ளிவாசல் போராளிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 63 எதிர்ப்பாளர்களுக்கு சவுதி அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. ஜனவரி 2, 2016 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் தேதியன்று சவூதி அரேபியா நாட்டில் உள்ள 12 மாகாணங்களில் வாளால் தலை துண்டித்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கரவாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 47 பொதுமக்களுக்கு பெருந்திரள் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 23 ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று சவூதி அரேபியா 37 சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதி குடிமக்களுக்கு பெருந்திரள் மரணதண்டனையை நிறைவேற்றியது. முக்கியமாக சித்திரவதையின் கீழ் பெற்ற வாக்குமூலங்கள் அடிப்படையில் பயங்கரவாதம் தொடர்பான கோரிக்கைகளுக்காக இத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நாட்டில் 6 மாகாணங்களில். மரணதண்டனைகள் தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இரண்டு உடல்கள் பொதுக் காட்சிக்கும் வைக்கப்பட்டன. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் கரீம் அல் அவாச்சு 16 வயதுடையவர். இருவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று சவுதி அரேபியா அதன் நவீன வரலாற்றில் 81 குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய பெருந்திரள் மரணதண்டனையை நிறைவேற்றியது. இந்த மரணதண்டனையே சமீபத்திய ஆண்டுகளில் சவூதியில் நிறைவேற்றப்பட்ட மிகப்பெரிய பெருந்திரள் மரணதண்டனை ஆகும். இந்த மரணதண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சீறார் குற்றவாளிகளுக்கும் துாக்கு

சவுதியின் நீதித்துறையை சீர்திருத்துவதற்காகவும், சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த பெருந்திரள் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என சவுதி அரேபியாவின் மன்னரும் உண்மையான ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் அல் சவுத் கூறினார். சவூதி அரேபியாவில் மரண தண்டனை என்பது சட்டப்பூர்வமான தண்டனையாகும். அங்கு மரணதண்டனை பொதுவாக வாளால் குற்றவாளியின் தலையை துண்டித்து அல்லது எப்போதாவது பொது இடத்தில் சுடுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. குழந்தை உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போதிலும், சவூதி அரேபியா குற்றத்தின் போது சிறார்களாக இருந்த குற்றவாளிகளையும் கூட 26 ஏப்ரல் 2020 வரை தூக்கிலிட்டது.

மரண தண்டனையை ஒழித்த மலேசியா

மரண தண்டையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றன. ஆனால், தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டால் அதன்பின்னர் கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு அச்சம் இல்லாமல் போய்விடும் அதனால் குற்றங்கள் அதிகரித்து விடும் என தூக்கு தண்டனைக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் லட்சியமாக உள்ளது. உலகிலுள்ள 195 நாடுகளில் 102 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 39 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை.
இந்த நிலையில், மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கு மரண தண்டனைகள் வழக்கப்பட்டு வந்தன. மரண தண்டனைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், மரண தண்டனையை மலேசிய ரத்து செய்துள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான மசோதாவை அமைச்சரவை ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு பதிலாக என்னென்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் மலேசிய சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைதி ஜாஃபர் தெரிவித்துள்ளார். மலேசிய அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Editor January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

பொதுமக்கள் தருகின்ற மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண ஆட்சியர் ரெ. சதீஷ் அலுவலர்களுக்கு உத்தரவு 

March 3, 2025
மாவட்டங்கள்

அடிப்படை வசதிகள் இருக்கா …  அரூர் அரசு மருத்துவமனையில்  மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு 

October 5, 2025
தொழில்

கடல் அளவு உயர்ந்து கடுகளவு குறைந்த தங்கத்தின் விலை!

June 19, 2024
நகை திருட்டு
குற்றம்

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

February 12, 2024
அரசியல்

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 

June 7, 2024
வள்ளி கும்மி மன அமைதியை உண்டாக்கும்
அரசியல்

வள்ளிகும்மியாட்டம் பெண்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் அரூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

February 6, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?