மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்திய நாட்டு சுதந்திரத்திற்க்காக வாழ்நாளை அர்பணித்த தியாகி சுப்பிரமணியசிவா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சாதனையாளர்கள் > இந்திய நாட்டு சுதந்திரத்திற்க்காக வாழ்நாளை அர்பணித்த தியாகி சுப்பிரமணியசிவா
சாதனையாளர்கள்

இந்திய நாட்டு சுதந்திரத்திற்க்காக வாழ்நாளை அர்பணித்த தியாகி சுப்பிரமணியசிவா

Editor
Last updated: 2023/12/19 at 8:17 AM
Editor
Share
3 Min Read
SHARE

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணியசிவா அவர்கள் திண்டுகல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகலட்சுமி
இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார்.
சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தே மாதரம்’ எனும் முழக்கங்கள் எழுந்தன. அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.

இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.

இதையும் படிங்க

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 
கவிதை
தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.

உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார். இந்நிலையில், 1915-ம் ஆண்டு எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.

சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.

தனது நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.

வாங்கிய இடத்தில் பாரதமாதாவுக்கு நினைவலாயம் எழுப்ப தனது நன்பர் சித்தரஞ்சன்தாஸை அழைத்து அடிக்கல் நாட்டினார்.
இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார். 1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார்.
பாப்பாரப்பட்டியில்
அவர் வாங்கிய இடத்தில் இவரை அடக்கம் செய்தனர்.
பின்னர் சுப்பிரமணியசிவா நினைவிடத்தில் அரசு மணிமண்டபம் கட்டியது.

சுப்பிரமணிய சிவாவின் எண்ணமான பாரதமாதாவுக்கு நினைவாலயம் எழுப்பவேண்டும் என்ற
சுப்பிரமணிய சிவா நினைவிடம் தமிழக அரசின் சார்பில்
அமைந்துள்ள இடத்தில்தமிழக அரசின் சார்பில்அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணியசிவா அவர்களின் தியாகம் ஒரு வரலாறு

Editor December 19, 2023 December 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம்  ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 

May 24, 2024
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

February 28, 2024
தமிழ்நாடு

வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 

June 28, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா

February 21, 2024
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  

March 12, 2025

மேலும் படிங்க

சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 17, 2025
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024
சாதனையாளர்கள்

திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

May 25, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?